தமிழ்நாடு

சீர்காழி அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை

20th Oct 2020 02:55 PM

ADVERTISEMENT

 

சீர்காழி அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சஞ்சீவிராயன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (55) விவசாயி. இவரது மகன் சந்தோஷ்குமார் கடந்த 9ம் தேதி சிதம்பரம் பி.முட்லூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தோஷ் இறந்த சோகத்திலிருந்து வந்த சேகர் இன்று அவரது படத்திறப்பு நடைபெற இருந்த நிலையில் மன உளைச்சலில் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ADVERTISEMENT

இது குறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT