தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் உண்டியல் காணிக்கை 2.56 லட்சம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை வருவாய் 2 லட்சத்து 56 ஆயிரத்து 315 இருந்தது.

இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம்  சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையைக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக திறந்து எண்ணுவது வழக்கம்.

அதன்படி ஐந்தாவது சனி வார விழா முடிவடைந்ததால் திங்கள்கிழமை நிரந்தர உண்டியல்கள் 8, தற்காலிக உண்டியல்கள் 19 ,என மொத்தம் 27 உண்டியல்களும் கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டுவந்து உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில் ஐந்தாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூபாய் 2 லட்சத்து 56 ஆயிரத்து 315 இருந்தது.

காணிக்கை எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் உதவி ஆணையர் கணேசன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT