தமிழ்நாடு

அகில இந்திய கராத்தே: தங்கம் வென்ற மாணவர்களுக்கு ஆரணியில் பாராட்டு விழா  

19th Oct 2020 04:53 PM

ADVERTISEMENT

 

அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு ஆரணியில் பாராட்டு விழா நடைபெற்றது.     
      
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் கலைமகள் வித்தியாலய ஆங்கிலப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் சார்பில் கராத்தே வகுப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் இ கட்டா அகில இந்திய கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது. 

இதில், ஆரணியில் இருந்து 28 வயது பிரிவில் மணிகண்டன்,16 வயது பிரிவில் பிரவீன்,15 வயது பிரிவில் ஹரிஷ்,14 வயது பிரிவில் வீனஸ்‌ஸ்ரீ,13 வயது பிரிவில் சாய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள் 5 பேரும் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர். இம்மாணவர்களுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சி ஆரணியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,கராத்தே மாஸ்டர் பரந்தாமன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய கராத்தே சங்கத்தில் தொழில்நுட்ப உறுப்பினரும், சித்தூர் மாவட்ட பொறுப்பாளருமான கண்ணன்,உயர்நீதிமன்ற வக்கீல் ஜனார்த்தனன், பள்ளியின் தாளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மல்லியம்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் செல்விபாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

இதில், சிறப்பு விருந்தினராக ஆரணி காவல் நிலைய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் என்.பார்த்திபன் கலந்து கொண்டு அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களைப் பாராட்டி சிறப்புரையாற்றி பேசினார். உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் புத்திக் கூர்மையுடன் இருப்பர். கராத்தே,சிலம்பம், ஓட்டப்பந்தயம்,கால்பந்து உள்ளிட்ட ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மாணவர் பருவத்திலிருந்தே அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்குப் புத்திக் கூர்மை என்பது இருக்கும் என்று குறிப்பிட்டார். எனவே, உடற்பயிற்சியுடன் கல்வி கற்றால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று குறிப்பிட்டார். மேலும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு இருந்தால் கொரரோனா அவர்களை நெருங்காது என்றும் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT