தமிழ்நாடு

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் அளிக்க அலைமோதிய கூட்டம்

3rd Oct 2020 05:48 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களைக் கொடுக்க கூட்டம் அலைமோதியது.

சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு கடந்தவாரம் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி எல்லாபுரம் ஒன்றியத்தில் 14 சத்துணவு அமைப்பாளர் வரும் 22 சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. பகுதிக்குட்பட்ட சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 1558  விண்ணப்பமும் உதவியாளர் பணிக்கு 728 விண்ணப்பமும் கொடுக்கப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். 

இருப்பினும் கடைசி நாளான இன்று விண்ணப்பங்களைக் கொடுக்க ஏராளமானோர் காலை முதலே அலுவலக வாசலில் நின்றிருந்தனர்.  மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்று நாளை தெரிவிக்கப்படும் என்று ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தெரிவித்தது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT