தமிழ்நாடு

வேலூர் அருகே விவசாயத் தொழிலாளி, மகள் கழுத்தறுத்து கொலை: காவலர்கள் தீவிர விசாரணை

3rd Oct 2020 11:41 AM

ADVERTISEMENT

:

வேலூர்: வேலூர் அருகே வேப்பங்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளியும், அவரது மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே உள்ள ரஞ்சன்கொட்டாய் கிராமத்தில் அன்ஷர்பாஷா என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் பொன்னுச்சாமி(42). அந்த நிலத்திலுள்ள வீட்டிலேயே அவர் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை பொன்னுச்சாமியும், அவரது மகள் தீபா(10) ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். 

ADVERTISEMENT

இதனை பார்த்த அந்த பகுதியினர் வேப்பங்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து சென்ற காவலர்கள் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மற்றும் காவல் உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT