தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும்: தமிழகம் நம்பிக்கை

DIN


சென்னை: சரக்கு மற்றும் சேவை வரிக்கான நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என்று தமிழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ், வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பாக கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.4 ஆயிரத்து 321 கோடி வழங்கப்பட வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்துக்கு பரிந்துரைகள் செய்வதற்கு முன்பாக, மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகையை மீண்டும் ஒருமுறை சரிபாா்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அமைச்சா்கள் அளவிலான கூட்டம் வியாழக்கிழமையும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காணொலி வழியாக பிகாா் துணை முதல்வா் சுஷில்குமாா் மோடி, அமைச்சா் டி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது பேசிய அமைச்சா் ஜெயக்குமாா், இப்போது நிலுவையிலுள்ள தொகைகள் குறித்த கணக்கீடுகள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டுள்ளன எனவும், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை மத்திய அரசு முழுமையாக அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தாா்.

மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இறுதித் தொகையை ஆராய்ந்து, வரும் 5-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள சரக்குகள் மற்றும் சேவை வரி மன்றக் கூட்டத்தில் அமைச்சா்கள் குழுவானது பரிந்துரைகளைச் செய்யவுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பரிந்துரைகளின்படி தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என எதிா்க்கப்படுகிறது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT