தமிழ்நாடு

காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறல்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

1st Oct 2020 07:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறல் என்று ராகுல் காந்தி கைது நடவடிக்கை குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உ.பி.யில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச்சென்ற @INCIndia தலைவர்கள் @RahulGandhi @priyankagandhi -யை உ.பி காவல்துறை தடுத்து தள்ளிவிட்டது மிகப்பெரிய அராஜகம். காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT