தமிழ்நாடு

கள்ளச்சாராய ஒழிப்பு: சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது

DIN

சென்னை: கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகள் காந்தியடிகள் காவல் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையில் பணியாற்றும் டி. மகுடீஸ்வரி, லதா, சூ. செல்வராஜூ, சோ. சண்முகநாதன், சு, ராஜசேகரன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, (1)  டி. மகுடீஸ்வரி, பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, புனித தோமையார்மலை, தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், (2) ஆ.லதா, பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, முசிறி-துறையூர், திருச்சி மாவட்டம், (3) சூ.செல்வராஜூ, காவல் உதவி ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவு, சேலம் மண்டலம், (4) சோ.சண்முகநாதன், தலைமைக் காவலர் 731, திருவில்லிபுத்தூர் தாலூகா காவல் நிலையம், அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம், (5) சு.ராஜசேகரன், தலைமைக் காவலர் 1420, கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம், அயல்பணி மத்திய புலனாய்வுப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, தமிழக முதல்வரால் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT