தமிழ்நாடு

கடம்பூர் மலைப்பகுதியில் இளைஞர் கொலை: மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

30th Nov 2020 04:47 PM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கேர்மாளம் செல்லும் சாலை, வைத்தியநாதபுரம் என்ற இடத்தில் சாலையோர காட்டுப்பகுதியில் இளைஞர் சடலம் கிடப்பதாக அக்கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடம்பூர் காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

அடர்ந்த காட்டுப் பகுதியில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட நபர் 41 வயது மதிக்கத்தக்கவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். இரு மாநில எல்லைப் பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் வந்து கொலை சம்பவத்தை ஆய்வு செய்தார். 

மேலும் அவ்வழியாக செல்லும் நபர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுரை வழங்கி சிசிடி கேமரா பொருத்துமாறும் கேட்டுக்கொண்டார். கொலை செய்யப்பட்ட நபர் குறித்து கர்நாடக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கடம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ADVERTISEMENT


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT