தமிழ்நாடு

மருத்துவக் கல்விக் கட்டணம்: தமிழக அரசு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

30th Nov 2020 10:16 PM

ADVERTISEMENT


மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தமிழக அரசு ரூ. 16 கோடி ஒதுக்கியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 21-ம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்காக ரூ.16 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : medical studies
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT