தமிழ்நாடு

நாமக்கல்: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளர்கள் மனு அளிப்பு

DIN

வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தலைமையில் திரளாக வந்த லாரி உரிமையாளர்கள் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதன் அலுவலர் ஏ.கே. முருகனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: 

வேகக் கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றம் எந்த நிறுவனத்திலும் நோய் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் வில்லையையும்(ஸ்டிக்கர்) பெங்களூரைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அதனடிப்படையில் அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி ஏற்கெனவே லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடம் வாங்கி பொருத்துமாறு வலியுறுத்துகின்றனர். இவை மூன்றும் குறிப்பிட்ட நிறுவனங்களைச் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன புதுப்பிப்பு (எப்.சி.) சான்றிதழ் வழங்க அதிகாரிகள் முன்வருகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர். அதன்படியே நாமக்கல் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார். அதன்பின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குப் பின் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் லாரி உரிமையாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT