தமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

30th Nov 2020 04:28 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி கோமதி 48. இவர் நான்கு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். 

திங்கள்கிழமை காலை கல்லாவி செல்லும் சாலையில் உள்ள சின்ன கவுண்டர் என்பவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். இந்நிலையில் அருகிலிருந்த மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்ததில் பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. 

மீதமுள்ள 3 பசுமாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுகுறித்து கோமதி சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT