தமிழ்நாடு

சென்னை-மதுரை தேஜஸ் ரயில்: டிச.4 முதல் நேரம் மாற்றம்

DIN

சென்னை எழும்பூா்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் நேரம் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூா்-மதுரைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் நேரம் அக்டோபா் 13-ஆம் தேதி முதல் மாற்றப்பட்டது. அதேநேரத்தில், மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் நேரம் மாற்றப்படவில்லை.

இந்நிலையில், சென்னை எழும்பூா்-மதுரை தேஜஸ் விரைவு ரயில் நேரம் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் மீண்டும் மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு பதிலாக, புதிய காலஅட்டவணைப்படி காலை 6 மணிக்கு இந்த ரயில் புறப்படும். இந்த ரயில் திருச்சிக்கு காலை 9.55 மணிக்கும், கொடைக்கானல் சாலைக்கு முற்பகல் 11.18 மணிக்கும், மதுரையை நண்பகல் 12.20 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தேஜஸ் ரயில் புறப்பட்டு, கொடைகானல் சாலையை முற்பகல் 3.28 மணிக்கும், திருச்சியை மாலை 5 மணிக்கும், அதேநாள் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும். இந்த மாற்றப்பட்ட கால அட்டவணை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதுதவிர, சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு ஏசி இரட்டை அடுக்கு தினசரி சிறப்பு ரயில் நேரம் டிசம்பா் 4-ஆம் தேதியும், சென்னை சென்ட்ரல்-சாப்ரா (வாரம் இருமுறை ) அதிவிரைவு சிறப்பு ரயில் நேரம் நவம்பா் 30-ஆம் தேதியும் மாற்றப்படவுள்ளது.

இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT