தமிழ்நாடு

நிவர் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் காவலர்கள்

27th Nov 2020 11:42 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: நிவர் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் காவலர்கள் ஈடுபட்ட சம்பவம் தேர்வழி பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி காலனியில் நிவர் புயலால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியை யாரும் கடக்க இயலாத சூழல் ஏற்பட்டது.

இது குறித்து தேர்வழி ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா குமார் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் தனசாமிக்கு தகவல் தந்தார். தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தனிப்பிரிவு காவலர் தனசாமி உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து காவலர்கள் சேர்ந்து மரம் அறுக்கும் இயந்திரத்தை கொண்டு புயலால் வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதன் பிறகே தேர்வழி காலனியில் மக்கள் செல்லும் வழி பயன்படுத்தப்பட்டது.

நிவர் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் காவலர்கள் நேரில் ஈடுபட்ட சம்பவம் தேர்வழி பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags : cyclone Nivar cyclone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT