தமிழ்நாடு

காவிரி டெல்டாவில் சிறுதானிய உற்பத்தி திட்டம்; சி. பொன்னையன் ஆய்வு

DIN

நீடாமங்கலம்: காவிரி டெல்டாவில் சிறுதானிய உற்பத்தி திட்டத்தை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில வளர்ச்சிகொள்கைக் குழுத் துணைத் தலைவர் சி.பொன்னையன் ஆய்வு.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்நிலையத்தில் சிறுதானிய உற்பத்தி திட்டத்தை மாநில வளர்ச்சிகொள்கை குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறு தானிய உற்பத்தியை மீள்கொணர்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற தலைப்பில் ஒரு திட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த திட்டம் குறித்து மாநில வளர்ச்சி கொள்கைகுழு துணைத் தலைவர் சி.பொன்னையன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

திட்ட செயல்பாடுகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.

சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுதலின் அவசியம் குறித்து விவசாயிகளிடம் அவர் வலியுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது. காவேரிடெல்டா மாவட்டங்களில் கோடைப்பருவத்தில் நெற்பயிருக்கு தேவைப்படும் அதிகமான நீர்த் தேவையைக் குறைப்பதற்கும், குறுகியகாலத்தில் குறைந்த செலவில் அதிக மகசூல் மற்றும் லாபம் அடைவதற்கும் சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, குதிரைவாலி ஆகியவற்றைப் பன்னெடுங்காலமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டாலும் கடந்த 50 ஆண்டுகளாக நெல் சாகுபடி மூன்று போகங்களும் முன்னெடுக்கப்பட்டு சிறு தானிய சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். 

பல வேளைகளில் குறிப்பாக கோடைகாலங்களில் நீர்பற்றாக்குறை ஏற்பட்டு நெல் பயிரிடமுடியாத சூழல் ஏற்படுகிறது. ஆகவே காவேரி டெல்டா விவசாயிகளை சிறுதானிய சாகுபடிக்கு ஆழ்படுத்த மாநில சமச்சீர் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் காவேரி டெல்டா மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியை மீள்கொணர்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற தலைப்பிலான திட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

சமீபகாலமாக சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்து அதற்கான சந்தை விரிவடைந்து வருகிறது. இதற்குக்காரணம் சிறுதானியங்களில் உள்ள சத்துக்களும், மருத்துவகுணங்களும் மனிதர்களுக்கு வருகின்ற வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை குணப்படுத்த வல்லதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதன் காரணமாக சிறுதானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் அடுமனைப்பொருட்கள், சத்துணவு மற்றும் இதர மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் அங்காடிகளில் அதிகமாக விற்பனையாகிறது. இது தவிர மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் அங்காடிகளில் அதிகமாக விற்பனையாகிறது.

இது தவிர சிறுதானியங்கள் மற்ற பயிர்களை ஒப்பீடு செய்கையில் குறைந்த செலவு குறைந்த தண்ணீர் தேவை மற்றும் குறுகிய காலத்தில் அதிகலாபம் கொடுக்கின்றன. சிறுதானியங்களை பயிரிடுவதால் கிடைக்கின்ற நன்மைகள் பற்றி இந்த்திட்டம் மூலமாக கொரடாச்சேரி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறுதானிய சாகுபடிக்கு முன்வரும் விவசாயிகளுக்கு விதை மற்றும்  இதர பொருட்கள் வழங்கப்பட்டு சாகுபடிக்கான தொழில்நுட்பச் செய்திகள் வழங்கப்பட்டன.

2015-லிருந்து 2020 வரை ஒவ்வொரு வருடமும் 25 முதல் 30 விவசாயிகள் சிறுதானிய உற்பத்திக்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

இந்த திட்டத்தில் மூன்று நிலைகளில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் களப்பணியாற்றியுள்ளது. ஒன்று சிறுதானிய சாகுபடியை விவசாயிகளை மேற்கொள்ளச் செய்தல், இரண்டாவது மதிப்புக்கூட்டல் மற்றும் மூன்றாவதாக உற்பத்தி செய்த சிறுதானியங்களை விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு விவசாயிகளை ஆற்றுப்படுத்தியுள்ளது.

இதற்காக சிறுதானிய உற்பத்தியாளர் குழு கொரடாச்சேரி வட்டாரத்தில் பத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் விரைவில் சிறுதானிய மதிப்புக்கூட்டலுக்கான இயந்திரங்கள் கொடுக்கப்பட்டு வியாபார கதியிலே சிறுதானிய உற்பத்தியை விவசாயிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் சிறுதானிய உறபத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மற்றும் பயிற்சிகள் வாயிலாக கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 20 பயிற்சிகள், செயல்விளக்கங்கள், வயல்தினவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார். 
முன்னதாக வேளாண்மை அறிவியல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை அவர் நட்டார்.திட்ட செயல்பாடுகள் குறித்த கண்காட்சியை யும் பொன்னையன் பார்வையிட்டார். சிறுதானிய உற்பத்தி கையேடுகளையும் அவர் வெளியிட்டார். விவசாயிகளுக்கு குதிரைவாலி விதை, மண்புழு உரம், பூசண உயிர் எதிர்கொல்லி ஆகியவற்றையும் பொன்னையன் வழங்கினார். ஆய்வின்போது ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, நீடாமங்கலம் வேளாண்மை அறிவில் நிலைய தலைவர் ராமசுப்பிரமணியன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT