தமிழ்நாடு

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரால் பேருந்து இயக்கம் பாதிப்பு

DIN


விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரால் பேருந்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், இரு நாள்களாகப் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். 

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. விழுப்புரத்தில் 28 சென்டி மீட்டர் மழைப் பதிவானது. இதனால்  ஏரியில் கட்டமைக்கப்பட்ட விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் ஏரியைப் போல் தேங்கியது. இரு தினங்களாக மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தொடர்ந்து மழை நீர் தேங்கி நிற்பதால், வேறுவழியின்றி பேருந்துகள் மழை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கும் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் நகராட்சி சார்பில் 100 எச்பி திறன் கொண்ட இரண்டு ராட்சத மோட்டார்கள் மூலம் இரு தினங்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மழைநீர் வந்து கொண்டே இருப்பதால், பேருந்து நிலையத்தில் மழை நீர் வடிதல் தாமதமாகி வருகிறது.

தொடர்ச்சியாக தண்ணீரை இறைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை மாலை தண்ணீர் முற்றிலும் வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நகராட்சி ஆணையர் தஷ்ணாமூர்த்தி தெரிவித்தார். 

தற்போது வரை மழைநீர் தேங்கி உள்ளதால் 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் அவதி அடைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT