தமிழ்நாடு

புயல் பாதிப்பை கணக்கெடுத்த பிறகு நிவாரணம் குறித்து முடிவு: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் பாதிப்பை கணக்கெடுத்த பிறகு நிவாரணம் குறித்து முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். 

புதுச்சேரியில் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் வே. நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிவர் புயல் காரணமாக புதன்கிழமை முதல் தற்போது வரை தொடர்ந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் கடலுக்குள் வாங்காததால் செல்ல காலதாமதம் ஏற்பட்டுள்ளது.  மீனவர்களின் படகுகள், வலைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன. உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளதா? என்பது குறித்து கணக்கெடுப்பு செய்யப்படும்.

இதுவரை உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக எந்தவித தகவலும் வரவில்லை. இரவு நேரத்தில் புயல் தாக்கியதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. 

ஓரிரு இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ளன. புயலில் விழுந்த மரங்களை மீட்புக் குழுவினர் அகற்றி வருகின்றனர். ஓரிரு பகுதிகளில் தடைபட்ட மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு 12 மணி நேரத்தில் மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திய பின்னர் நிவாரணம் குறித்து முடிவு செய்யப்படும். 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.  

நிவாரண முகாம்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. 

புயல் பாதிப்பு சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT