தமிழ்நாடு

புதுவையில் நாளையும் பொது விடுமுறை

DIN

புதுச்சேரி: நிவர் புயல் தாக்கம் காரணமாக புதுவையில் வியாழக்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியில் புதன்கிழமை நள்ளிரவு அல்லது வியாழக்கிழமை காலையில் கரையைக் கடக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே புதன்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வியாழக்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். பொது விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என புதுவை அரசின் சார்பு செயலர் எம்.வி. கிரண் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT