தமிழ்நாடு

கனமழையில் உடைப்பு ஏற்பட்ட பண்ருட்டி ஏரிக்கரை சீரமைப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூர்: பண்ருட்டி பகுதியில் ஒன்றியக் கட்டுப்பாட்டில் உள்ள காரந்தாங்கள் ஏரியின் கரையில் ஏற்பட்ட உடைப்பை மண்மூட்டைகள் கொண்டு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீரமைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பண்ருட்டி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள காரந்தாங்கள் ஏரி உள்ளது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி அப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பண்ருட்டி காரந்தாங்கள் ஏரி பகுதியில் தற்போது கெயில் எண்ணெய் நிறுவனத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று  வருகிறது. குழாய் பதிக்கும் பணிக்காக ஏரியின் கரையை உடைத்து குழாய் பதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஏரிக்கரையை கெயில் நிறுவனத்தினர் சீரமைத்துள்ளனர். 

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் நிவர் புயல் காரணமாகவும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பண்ருட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து கெயில் நிறுவனத்திற்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட பண்ருட்டி காரந்தாங்கள் ஏரிக்கரையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரி நீர் வீணாக வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ.தினகரன், ஒன்றிய உதவி பொறியாளர் மாரிசெல்வம் உள்ளிட்ட ஊராக வளர்ச்சித்துறையினர் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் மூட்டைகளை கொண்டு உடைப்பு ஏற்பட்ட ஏரியின் கரையை புதன்கிழமை சீரமைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT