தமிழ்நாடு

சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து

25th Nov 2020 01:54 PM

ADVERTISEMENT

நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. புயலால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. 

புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதன்படி இன்று சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி, ஹூப்ளி, மங்களூர், பெங்களூரு, கோழிக்கோடு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

Tags : nivar cyclone
ADVERTISEMENT
ADVERTISEMENT