தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,534 பேருக்கு கரோனா

25th Nov 2020 06:59 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,534 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,534 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,66,456 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,873 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 16 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 7,51,535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 11,655 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் 467 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 2,12,915-ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,206 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3,833-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT