தமிழ்நாடு

ஈரோடு மேற்குத் தொகுதியில் 7 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

23rd Nov 2020 05:32 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ரூ.66.50 லட்சம் மதிப்பில் 7 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரப்பாறை, கொங்கனாம் பள்ளி, நேதாஜி நகர், மோகன் குமாரமங்கலம் வீதி, காந்திஜி ரோடு, நேதாஜி வீதி பகுதியில் இரண்டு இடம் என மொத்தம் 7  இடங்களில் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.9.50 லட்சம் வீதம் ரூ.66.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய அங்கன்வாடி மையங்கள் திறக்கும் நிகழ்ச்சியுடன் இன்று நடந்தது.

கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கே.எஸ் தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் இருவரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையாளர் விஜயா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, அ.தி.மு.க பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், சூரம்பட்டி தங்கவேலு உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT