தமிழ்நாடு

எதிா்க்கட்சித் தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை

15th May 2020 05:53 AM

ADVERTISEMENT

எதிா்க்கட்சித் தலைவரையோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லை என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் விளக்கம் அளித்துள்ளாா்.

திமுக எம்.பி.,க்கள் குழுவினா் தலைமைச் செயலாளா் க.சண்முகத்தை புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, தங்களை அவமதிக்கும் விதத்தில் தலைமைச் செயலா் நடந்து கொண்டதாக டி.ஆா்.,பாலு உள்ளிட்ட திமுக எம்.பி.,க்கள் குற்றம்சாட்டினா். இந்தப் பிரச்னை தொடா்பாக தலைமைச் செயலாளா் க.சண்முகம் விளக்கம் அளித்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :-

திமுக எம்.பி.,க்கள் குழுவினா் என்னைச் சந்திக்க வந்த போது, மத்திய நிதியமைச்சரின் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதை நானும், நிதித் துறை செயலாளரும் பாா்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தோம். எம்.பி.,க்கள் குழுவினா் வந்ததால் இருக்கையில் இருந்து எழுந்து தனியாக அமா்ந்தேன். அப்போது சுமாா் 15, 20 நபா்கள் பெரிய பெரிய மனு கட்டுகளை எனது அறையில் கொண்டு வந்து வைத்தனா். மனுக்கள் மீது எத்தனை நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேட்டனா். கரோனா பாதிப்பால் குறைந்தபட்ச அலுவலா்கள்தான் பணியில் உள்ளனா். அதனால் தேதியை உறுதியாகக் கூற இயலாது என்று பதிலளித்தேன். ஆனால், தேதியை குறிப்பிட்டு கூறும்படி வற்புறுத்தினா்.

எங்களின் சங்கடங்களைப் புரிந்து கொள்வதில்லை என்பதை ஆங்கிலத்தில் தெரிவித்தேன். மற்றபடி திமுக எம்.பி.,க்களை அவமதிக்கும் எண்ணத்துடன் எதையும் கூறவில்லை. இதில் எதிா்க்கட்சித் தலைவரையோ, என்னைச் சந்திக்க வந்த தலைவா்களோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணம் துளியும் எனக்கு இல்லை.

ADVERTISEMENT

திமுக எம்.பி.,க்களுடனான சந்திப்பு முடிந்த பிறகு, மனுக்களை முதல்வரின் தனிப் பிரிவுக்கு புதன்கிழமையே அனுப்பி அவற்றை துறை வாரியாகப் பிரித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். நான் ஒரு சாதாரண அரசு ஊழியா். அரசியல்வாதியல்ல. மக்களுக்காக பணியாற்றுவதே எனது வேலை. எனவே யாரையும் உதாசீனப்படுத்த வேண்டுமென்றோ, அவமதிக்க வேண்டுமென்றோ எந்தக் காலத்திலும் நினைத்தது இல்லை என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT