தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா இல்லாத மாவட்டமானது கோவை

13th May 2020 02:50 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டமானது கரோனா நோயாளிகளே இல்லாத மாவட்டமாக மாறியள்ளது.

இதுவரை கோவையில் 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கடைசி கரோனா நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்ததன் அடிப்படையில் இன்று அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து, தமிழகத்தில் கரோனா இல்லாத மாவட்டங்களான ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களின் பட்டியலில் கோவையும் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT