தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதாரத்துறை

30th Mar 2020 09:58 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1071 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 29  பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆகா உள்ளது.  

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT