தமிழ்நாடு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்

30th Mar 2020 10:58 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கரோனா நோற்று தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும் வகையில், முதல்வரின் பொதுநிவாரணநிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று வெள்ளிக்கிழமை தமிழக அரசு வேண்டுகோள் விடுவித்தது. 

இதையடுத்து கரோனா நோய்த் தடுப்பு பணிகள்  மற்றும் நிவாரண உதவிகளுக்காக திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : DMK Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT