தமிழ்நாடு

விழுப்புரத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட கரோனா தடுப்பு விழிப்புணர்வு

23rd Mar 2020 04:38 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர். வழக்கம்போல் திங்கள்கிழமை காலை முதல் அனைத்துவித கடைகள் திறக்கப்பட்டன. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயங்குகின்றன.

முக்கிய வீதிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. விழிப்புணர்வு தகவல் தெரிந்தும் பெரிய அளவில் மக்கள் அதனை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாயில் பகுதி ஒரு கதவு மூடப்பட்டு வாயில் பகுதியில் மனுபெட்டி வைக்கப்பட்டு கோரிக்கை மனு பெறப்பட்டது. 

ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கை கழுவும் தொட்டி அமைக்கப்பட்டு கை கழுவி பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்திக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் மனு அளிக்க வந்த மக்கள் பெட்டியில் போட்டுத் திரும்பிச் சென்றனர்.

ADVERTISEMENT

விழுப்புரம் புதுச்சேரி மாவட்ட எல்லையான கோட்டகுப்பம், மதகடிப்பட்டு பகுதிகள் பேரிகார்டு தடுக்கப்பட்டு இரு மாவட்ட போலீசார், வெளிமாநில வாகனங்கள் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ஏராளமான வாகன ஓட்டிகள் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுக் கடந்து செல்வதுமாக இருந்தது.

விழுப்புரத்தில் ரயில் நிலையம் அருகேயும், நான்கு முனை சாலை சந்திப்பு பகுதியிலும் திடீரென போலீசார் சாலையில் நின்று கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, கை கழுவும் முறைகள் குறித்தும் 10 நிமிடங்கள் விளக்கினர். ஏராளமான வாகன ஓட்டிகள் நின்றபடி கேட்டுச் சென்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT