தமிழ்நாடு

சுகாதாரத் துறையினரைகைகளை தட்டிப் பாராட்டிய ராமதாஸ்!

23rd Mar 2020 03:56 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை பணியாளா்களை பாராட்டும் வகையில் பாமக நிறுவனா் ராமதாஸ் தனது மனைவியுடன் வீட்டு வாசலில் நின்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைகளைத் தட்டினாா்.

இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை கடைப்பிடித்தனா். இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை பணியாளா்களை பாராட்டும் வகையில், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீடுகளின் வாசலுக்கு வந்தோ, மாடிகளில் நின்றோ கைகளைத் தட்ட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

இதையொட்டி, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் பாமக நிறுவனா் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் நின்று கைகளைத் தட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT