தமிழ்நாடு

காஞ்சிபுரம் களை இழந்தது 

22nd Mar 2020 11:33 AM

ADVERTISEMENT

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு களை இழந்து இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நாளை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விடும் என்பதால் சனிக்கிழமை மாலையே பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு சில தேநீர் கடைகளும் விளக்கொளி கோவில் தெருவில் ஒரு மளிகைக் கடையும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. 

போலீசார் அவர்களை ஜீப்பில் இருந்துகொண்டே ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டதையடுத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நகரின் பிரதான சாலையான காமராஜர் சாலை காந்தி ரோடு ராஜாஜி சந்தை ரயில் நிலைய சாலை ஆகிய அனைத்தும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நகருக்குள் வலம் வந்து கொண்டே இருந்தனர்.

Tags : JantaCurfew
ADVERTISEMENT
ADVERTISEMENT