தமிழ்நாடு

கரோனா: வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு அரசு உதவ ரஜினி கோரிக்கை

19th Mar 2020 02:30 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு எதிரொலியாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.

ADVERTISEMENT

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT