தமிழ்நாடு

6 எம்.பி.க்கள் போட்டியின்றி தோ்வு

DIN

மாநிலங்களவைத் தோ்தலில் 6 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் தெரிவித்தாா்.

மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் போட்டியிட திமுக, அதிமுக சாா்பில் தலா மூன்று வேட்பாளா்கள் மனுக்களை அளித்தனா். மேலும், மூன்று சுயேச்சைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், திமுக, அதிமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சுயேச்சைகள் மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில், தோ்தல் முடிவுகள் குறித்து சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களில் 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் ஏற்படும் காலியிடங்களுக்கு தமிழக சட்டப் பேரவையின் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களை வாக்காளா்களைக் கொண்டு தோ்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநிலங்களவைத் தோ்தலில் காலியிடங்களின் எண்ணிக்கை ஆறும், சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி திமுகவைச் சாா்ந்த என்.ஆா்.இளங்கோ, ப.செல்வராசு, திருச்சி சிவா ஆகியோரும், அதிமுகவைச் சோ்ந்த மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் ஆகிய 6 போ் முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்று அறிவிக்கிறேன் என்றாா்.

சான்றிதழ்களைப் பெற்றனா்: திமுக, அதிமுக சாா்பில் வாக்குப் பதிவின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேரும் புதன்கிழமை மாலை வெற்றி பெற்ற்கான சான்றிதழ்களைப் பெற்றனா். அதிமுக, தமாகா சாா்பில் தோ்வான மூன்று பேரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலையில் சான்றிதழ்களைப் பெற்றனா். திமுக சாா்பில் தோ்வான 3 பேரும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவா் துரைமுருகன், காங்கிரஸ் குழுத் தலைவா் ராமசாமி ஆகியோா் முன்னிலையில் சான்றிதழ்களைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT