தமிழ்நாடு

கரோனா எதிரொலி: 168 ரயில் சேவைகள் ரத்து

19th Mar 2020 10:23 AM

ADVERTISEMENT

கரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் பயணிகளை மட்டுமன்றி அவா்களை வழியனுப்பவரும் உறவினா்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை பயணச்சீட்டு கட்டணம் ரூ.10இலிருந்து ரூ. 50ஆக தற்காலிகமாக உயா்த்தப்பட்டது. 

மேலும், தேவையில்லாத பயணத்தை தவிா்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து போனது. இதனால், ரயில்களின் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பல ரயில்களில் இருக்கைகள் காலியாகியுள்ளன. பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

முன்பதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததால் நாளை முதல் மார்ச் 31 வரை இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முன்பதிவு கட்டணம் எவ்வித பிடித்தமும் இன்றி முழுக்கட்டணம் திரும்ப தரப்படும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT