தமிழ்நாடு

தாராபுரம் அருகே கிணற்றில் தொழிலதிபர் சடலம் மீட்பு

6th Mar 2020 07:09 PM

ADVERTISEMENT

 

தாராபுரம்: தாராபுரம் அருகே உள்ள கிணற்றில் இருந்து தொழிலதிபர் ஒருவர் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த காளிபாளையம், திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் ரங்கராதன்(70), கோயில் அர்ச்சகரான இவரது மகன் சுரேஷ்குமார் (42), இவரது மனைவி சுதா(35), இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ்குமார் திருமுருகன்பூண்டியில் பார்சல் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், சுரேஷ்குமாருக்கும், சுதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குடும்ப பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, வெளியே சென்ற சுரேஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ரங்கநாதன் கடந்த 2 நாள்களாக உறவினர்கள் வீட்டில் தேடி வந்துள்ளார்.இந்த நிலையில், ரங்கநாதன் வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்கிழமை துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது அந்த கிணற்றில் பார்த்தபோது சுரேஷ்குமார் சடலமாக மீதப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த தகவலின்படி தாராபுரம் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி சுரேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து கிணற்றில் சடலத்தை வீசிச்சென்றனரா என்பது குறித்து தாராபுரம் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT