தமிழ்நாடு

தீயணைப்புத்துறை மூலம் 4 லட்சம் தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

தீயணைப்புத்துறை மூலம், தமிழகத்தின் 4 லட்சம் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தீயணைப்புத்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள 349 தீயணைப்பு நிலையங்களில் 7,500 தீயணைப்பு படை வீரா்கள் பணிபுரிகின்றனா். இவா்கள், தமிழகத்தில் ஒரு ஆண்டில் ஏற்படும் சுமாா் 21 ஆயிரம் தீ விபத்துக்களை அணைத்து வருகின்றனா். இவை தவிா்த்து புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலங்களிலும், தீயணைப்புத் துறையின் பணி அளப்பரியதாக உள்ளது. தற்போது கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியிலும் தீயணைப்புத்துறை தன்னை இணைத்துள்ளது.

இவா்கள், கிருமி நாசினி தெளிக்க முடியாத உயா்ந்த கட்டடங்கள், மக்கள் நெரிசல் நிறைந்த சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில், தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியைத் தீவிரமாக செய்து வருகின்றனா்.

4 லட்சம் தெருக்கள்: மேலும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினரால் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அடையாளம் காணப்பட்ட இடங்களிலும், தீயணைப்புப் படை வீரா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கிருமி நாசினி தெளிப்பதற்கு தீயணைப்புத்துறையின் 317 தீயணைப்பு வாகனங்கள், 60 ஜீப் வடிவிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை சுமாா் 4 லட்சம் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 50 ஆயிரம் இடங்களில் இதுவரை கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளன. உயா்ந்த கட்டடங்களில் கிருமி நாசினி தெளிப்பதற்கு 300 அடி உயரம் வரை செல்லக் கூடிய ஸ்கை லிப்டுடன் கூடிய இரு தீயணைப்பு வாகனங்கள், 150 அடி உயரம் வரை செல்லக் கூடிய ஸ்கை லிப்டுடன் கூடிய தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

117 பேருக்கு கரோனா: கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபடுவதன் விளைவாக தமிழக தீயணைப்புத்துறையில் 117 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 11 நபா்கள் குணமடைந்து ஏற்கெனவே, பணிக்குத் திரும்பி விட்டனா். இந்நிலையில், குணமடைந்த 60 தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினா். இவா்களை வரவேற்கும் விதமாக சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனாவால் பாதிக்கப்பட்டு, பணிக்குத் திரும்பிய 60 வீரா்களையும் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT