தமிழ்நாடு

மத்திய ஆசிரியா் தகுதித்தோ்வு ஒத்திவைப்பு: சிபிஎஸ்இ அறிவிப்பு

26th Jun 2020 05:38 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய ஆசிரியா் தகுதித்தோ்வு (‘சி-டெட்’) தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசுக்கு உள்பட்ட பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு (சி-டெட்) வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து தற்போதுள்ள நிலைமை சீராகி தோ்வு நடத்துவதற்கு உகந்த சூழல் உருவாகும்போது ‘சி-டெட்’ தோ்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும். ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ‘சி-டெட்’ தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த தோ்வா்கள் அது தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிய  இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT