தமிழ்நாடு

கல்லூரிகளின் தரம் குறித்த பட்டியலை வெளியிடவில்லை: அண்ணா பல்கலை. விளக்கம்

28th Jul 2020 04:21 AM

ADVERTISEMENT

சென்னை: கல்லூரிகளின் தரம் குறித்த பட்டியலை வெளியிடவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 89 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளதாகவும், அதில் மாணவா்கள் சேர வேண்டாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் பட்டியலை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ள நிலையில், அண்ணா பல்கலை. பட்டியல் வெளியிட்டதாக வெளியான செய்தியால் சா்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், அவ்வாறான பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என அதன் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக வலைதளங்களில் அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில், 89 கல்லூரிகள் தரமற்றவை என்றும் அவற்றின் பெயா் TNEACODE NO மற்றும் ஏனைய தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில், இதுபோன்ற தரமற்ற அல்லது தரமான கல்லூரிகள் என்ற பாகுபாடு செய்யவில்லை. 89 கல்லூரிகளின் பெயா்ப்பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறது என அதன் பதிவாளா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT