தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு: கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு

13th Jul 2020 03:38 PM

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ மனு அளித்துள்ளது. 

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுரைப்படி சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ இவ்வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. 

அதன்படி, இந்த வழக்கில் கைதான போலீஸாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று சிபிசிஐடி மற்றும் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT