தமிழ்நாடு

தாராபுரம் அருகே மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

13th Jul 2020 05:26 PM

ADVERTISEMENT

 

தாராபுரம் அருகே விவசாயி தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்துகிடந்தன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி கிராமம் பொம்மநாயக்கன் தோட்டத்தைச் சேர்ந்தவர் பூவேந்திரன், இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 20 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பூவேந்திரன் மாலையில் அங்குள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் அலறலைக் கேட்டு அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது பட்டியில் இருந்து மர்ம விலங்கு ஒன்று எட்டிக்குதித்து ஓடியதைப் பார்த்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், பட்டியில் இருந்த 10 ஆடுகள் கழுத்துப்பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து பூவேந்திரன் கொடுத்த தகவலின்பேரில் தாராபுரம் காவல் துறையினரும், தொப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலரும் சம்பவ இடத்துக்குவந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

Tags : goats
ADVERTISEMENT
ADVERTISEMENT