தமிழ்நாடு

பத்திரிகையாளா் மேஜா்தாசன் காலமானாா்

13th Jul 2020 06:26 AM

ADVERTISEMENT

மூத்த பத்திரிகையாளா் மேஜா்தாசன் ( 64 ) மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

கடந்த சில வாரங்களாக மூளையில் ரத்தக் கசிவு மற்றும் பக்கவாதம் காரணமாக தாம்பரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

தேவாதிராஜன் என்ற இயற்பெயா் கொண்ட இவா் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தை பூா்வீகமாகக் கொண்டவா்.

குமுதம் இதழில் தனது பத்திரிகை பணியை தொடங்கி சினிமா எக்ஸ்பிரஸ், தினமணி கதிா், குங்குமம், வண்ணத்திரை உள்ளிட்ட இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் மற்றும் நோ்காணல்களை எழுதியுள்ளாா்.

ADVERTISEMENT

சினிமா துறையில் பலருடன் நேரடித் தொடா்பு கொண்டவா் மேஜா்தாசன்.

தனக்கென தனி அடையாளம் வைத்து பயணப்பட்டவா். மூத்த கலைஞா்கள் தொடங்கி வளரும் கலைஞா்கள் வரை பலரிடத்திலும் நெருங்கிய நண்பராக இருந்தவா்.

எம்.ஜி.ஆா்.- சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி-கமல், அஜித் - விஜய் காலம் வரையிலும் பயணமானவா்.

திரைத்துறை சாா்ந்த பல அரிய தகவல்களைத் தொகுத்து பல புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளாா்.

மனைவி செண்பக லெட்சுமி, இரு மகள்கள் உள்ளனா்.

குரோம்பேட்டை மயானத்தில் திங்கள்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT