தமிழ்நாடு

சென்னையில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது: ஆர்.பி. உதயகுமார்

13th Jul 2020 01:16 PM

ADVERTISEMENT


தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் கரோனா தொற்று சென்னையில் படிப்படியாக குறைந்து வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று (13.07.2020) திரு.வி.க. நகர் மண்டலத்தில் கோபாலபுரம் சென்னை நடுநிலைப்பள்ளியில் கரோனா தடுப்புப்பணி மேற்கொள்ளும் 70 களப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்கள். பின்பு அங்குள்ள நகர்புற நலவாழ்வு மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு வருபவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் முறை குறித்து கேட்டறிந்தார்கள் மற்றும் நடமாடும் கோவிட் - 19 பரிசோதனை வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் பழனிசாமியின்  அயராத பன்முக கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் சென்னையில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருவது நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

ஒவ்வொரு தெருக்களுக்கும் களப்பணியாளர்களை நியமித்து வீடு வீடாக சென்று மக்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கப்படுவதால் கரோனா தொற்று குறைந்து வருகிறது.

ஆரம்பநிலையிலே கண்டறிவதால், தொற்று குறைந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

தெருத்தெருவாக மருத்துவமுகாம் நடத்தி காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு கரோனா தொற்று இருப்பின் உடனடியாக கோவிட் கேர் சென்டர் சென்று சிகிச்சை அளித்தல், வீடுகளில் தனிமைப்படுத்துல் அவர்களுக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது.

அலோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் சோப்பு போட்டு கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு 1.38 இலட்சம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க. மண்டலத்தில் 6009 பேர் கரோனா தொற்று ஏற்பட்டு 4,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,577 போர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் முதலிடத்தில் இருந்த திரு.வி.க நகர் மண்டலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் நோய் தொற்று குறைந்து 7-வது இடத்திற்கு வந்துள்ளது. திரு.வி.க. நகர் மண்டலத்தில் அம்லா சித்த மருத்துவம் மூலம் கரோனா சிகிச்சை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 600 பேருக்கு கபசுர குடிநீர், தாளிசாளி மாத்திரை, ஆடாதொடை மணப்பாகு கூட்டு மருந்து வழங்கப்பட்டு நல்ல பலனை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT