தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து விற்பனை

25th Feb 2020 11:32 AM

ADVERTISEMENT

 

ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தது. அப்போது, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலையும் குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தாலும், பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் ஏறுமுகமாகவே இருந்தது. 

பிப்.24 திங்கள்கிழமையான நேற்று மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.752 உயா்ந்து, ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று(பிப்.25) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.552 குறைந்து, ரூ.32,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.69 குறைந்து, ரூ.4,097-க்கு விற்பனையாகிறது.

கடந்த 18-ஆம் தேதி முதல் கடந்த 24-ஆம் தேதி வரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.2,112 வரை விலை உயர்ந்துள்ளது. ஓரிரு வாரங்களுக்கு தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளதாக இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.52.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.52,700 ஆகவும் விற்கப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,097

1 சவரன் தங்கம் ..................... 32,776

1 கிராம் வெள்ளி .................. 52.70

1 கிலோ வெள்ளி ................. 52,700

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,166

1 சவரன் தங்கம் ..................... 33,328

1 கிராம் வெள்ளி .................. 53.30

1 கிலோ வெள்ளி ................. 53,300

Tags : gold rate
ADVERTISEMENT
ADVERTISEMENT