தமிழ்நாடு

பாளையங்கோட்டை சிவன் கோயிலில் வித்யா ஞான சரஸ்வதி மஹா ஹோமம் 

23rd Feb 2020 11:01 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் திருக்கோயிலில் வித்யா ஞான சரஸ்வதி மஹா ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் யாகத்தில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள் கல்வியில் சிறந்தவிளங்க வேண்டி வித்யா ஞான சரஸ்வதி மஹா ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதன்பின்பு ஞான கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வித்யா ஞான சரஸ்வதி ஹோமம், மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், ஹயக்கிரீவர் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நண்பகலில் ஜலதுர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கர்நகர், மஹாராஜா நகர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT