தமிழ்நாடு

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

21st Feb 2020 04:07 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மின்வாரிய ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை அடிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(57). இவரது மனைவி ராஜராஜேஸ்வரி(45). கார்த்திகேயன் திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜராஜேஸ்வரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு மனைவி ராஜராஜேஸ்வரியை அழைத்து கொண்டு கார்த்திகேயன் சென்னைக்கு சென்றார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கார்த்திகேயன் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். 

ADVERTISEMENT

அதேபோல் 2 கிலோ வெள்ளி பொருட்களையும், ரூ.40 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். 

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், கார்த்திகேயனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சென்னையில் உள்ள கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று,  கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT