தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

2nd Feb 2020 12:21 PM

ADVERTISEMENT

 

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

ADVERTISEMENT

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT