தமிழ்நாடு

மாம்பாக்கம் பகுதியில் ரூ.8.90 கோடியில் துணைமின் நிலையம் திறப்பு: முதல்வர்

7th Dec 2020 04:52 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் ரூ.8.90 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின்நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மாம்பாக்கம், போந்தூர், வடமங்கலம், திருமங்கலம் உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கவும் அதே போல் மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள 8 தனியார் தொழிற்சாலைகளுக்கும் மின்வினியோகம் வழங்கும் வகையில் தமிழ்நாடு தன்தொடரமைப்பு கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் ரூ 8.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக 110/11 கிலோவாட் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த துணை மின்நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். துணை மின் நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.மழனி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில்  ஶ்ரீபெரும்புதூர் நகரக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் போந்தூர் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, மாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேம்புலி, மின்வாரிய செயற்பொறியாளர் சக்திவேல், உதவி செயற்பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : TN CM
ADVERTISEMENT
ADVERTISEMENT