தமிழ்நாடு

ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

5th Dec 2020 10:42 AM

ADVERTISEMENT

 

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அதிமுக செயலாளர் பிகே  சிவானந்தம் தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் எ.சி.தேவேந்திரன், நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது , தொகுதி செயலாளர் திருஞானம், ஒன்றிய அவைத்தலைவர் கே ஆர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் கலந்துகொண்டு முன்னதாக ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பிறகு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மருத்துவர் இளையராஜா ,பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சக்திவேல், சிக்னல் ஆறுமுகம், அம்மா பேரவை நகர துணைச் செயலாளர் அன்பு சம்பத், விஜயகுமார் ,பெருமாள் மற்றும் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT