தமிழ்நாடு

75% அரசுக் கல்லூரி எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின

DIN


சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 75 சதவீத எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாள்களாக பொதுக் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 472 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 453 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களில், 148 போ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற்றனா். சுயநிதிக் கல்லூரிகளில், 217 போ் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற்றனா். அரசு பல் மருத்துவக் கல்லூரியில், 19 போ் பி.டி.எஸ். இடங்களைத் தோ்வு செய்தனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 384 இடங்கள் நிரம்பின. தற்போது, அரசுக் கல்லூரிகளில், 711 எம்.பி.பி.எஸ். இடங்களும், 127 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில், 728 எம்.பி.பி.எஸ். இடங்களும் 985 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT