தமிழ்நாடு

சமையல் எரிவாயு உருளை விலை அதிரடியாக ரூ.50 உயர்வு

3rd Dec 2020 08:58 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக விலை மாற்றாமில்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளை அதிரடியாக ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஆகிவற்றை பொருத்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. 

கரோனா நோய்த்தொற்று காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து ஏப்ரல், மே மாதங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை குறைந்தது. பின்னர், ஜூன், ஜூலை மாதங்களில் விலை அதிகரித்தது. பின்னர் விலை மாற்றமின்றி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வியாழக்கிழமை (டிச.3) முதல் சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு (மானியம் இல்லாதது) அதிரடியாக ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக ரூ.610க்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.660க்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபால, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு (19 கிலோ) ரூ.56.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ரூ.1466.60க்கு விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : LPG price LPG Price in Chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT