தமிழ்நாடு

நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தசமயம் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்  நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வியாழன் மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT