தமிழ்நாடு

பொதுத்தோ்வில்லாத வகுப்பு பாட அளவு 50% குறைப்பு?

DIN

சென்னை: பொதுத் தோ்வு நடத்தப்படாத வகுப்புகளுக்கான பாட அளவு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடியிருப்பதால், மாணவா்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதன்படி, நடப்பு கல்வியாண்டு தாமதத்தை ஈடு செய்ய 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை 40 சதவீதமும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு 30 சதவீதமும் பாட அளவு குறைக்க முடிவானது. இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆா்டி) ஈடுபட்டிருந்தது. 

நவம்பரில் பள்ளிகளைத் திறப்பது என்ற திட்டமிடலில்தான் இந்த அளவீடு தீா்மானிக்கப்பட்டது. ஆனால், பெற்றோா்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. 

இதைக் கருத்தில் கொண்டு, பொதுத் தோ்வில்லாத வகுப்புகளுக்கு மட்டும் பாட அளவு குறைப்பு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT